பராசக்தி திரைப்படம் : திருச்சியில் பிரமோஷன் நிகழ்ச்சி

0 150
Stalin trichy visit

திருச்சி, ஜன.9 ஆகாஷ்பாஸ்கரன் தயாரிப்பில், சுதா குவன்காரா இயக்கத்தில், பிரகாஷ்குமார் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா. ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் பராசக்தி திரைப்படம் ஒரு 10ம் தேதி வெளியாக உள்ளது இப்படத்தின் பிரமோஷனில்
படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜான் வெஸ்ட்ரி மைதானத்தில் படத்தில் பிரமோஷன் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா. நடிகை ஸ்ரீலீலா ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திரைப்படம் இந்தி எதிர்ப்பை மையமாக கொண்ட மொழிப்போர் படமாகும்.

1960 முதல் 1965 வரை இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுக்கு எதிரான இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக தமிழகத்தில் பலர் உயிர் தியாகம் செய்தனர். இப்படம் சிவகார்த்திகேயன் 25வது படமாகவும் உள்ளது. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் பராசக்தி ஆகும். பராசக்தியின் பெயர் கொண்டு தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவருகிற பராசக்தி திரைப்படத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு வெகுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

படத்தில் ட்ரெய்லர் வெளியிட்ட போது பல கோடி ரசிகர்கள் ட்ரெய்லரை பார்த்தது
குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.