தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு “பகுதி சபா” கூட்டம்

0 194
Stalin trichy visit

திருச்சி, ஜன.25  தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது – மேயர் அன்பழகன் பங்கேற்பு

திருச்சி மாநகராட்சியின் 5-வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு மூலைக் கொல்லை தெரு, மாநகராட்சி உருது நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்ட றிந்து மனுக்களை பெற்றார்.

இந்தக் கூட்டத்தில் மூலக்கொல்லைத் தெரு, வள்ளுவர் தெரு, சவேரியார் கோவில் தெரு , மல்லிகைபுரம் , ஜெனரல் பஜார் , வண்ணாரப்பேட்டை ,ஜெனரல் பஜார், பென்சனர், தென்னூர், தெருபட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர் .

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார் .

27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும்மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் மேயர் அன்பழகன் விளக்கமாக எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மைய அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி மொழியை மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை ஆணையர் பாலு, நகர நகர அலுவலர் விஜய சந்திரன் உள்ளிட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.