மாட்டை வைத்து அரசியல் : சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம் கருத்து

0 247
Stalin trichy visit

திருச்சி-25 தமிழிசை செளந்தரராஜன் ஏதோ நிர்பந்தத்தின் காரணமாக தான் கோமியத்திற்கு ஆதரவாக பேசி உள்ளார். தனிப்பட்ட முறையில் அவரும் கோமியம் அருந்துவதை ஏற்று கொள்ள மாட்டார் – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கருத்து

சமூக சமுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், மருத்துவர்கள் சாந்தி, முத்துக்குமார் ஆகியோர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில்,  உலகத்தில் எந்த நாட்டிலும் கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்பது நிரூபிக்கப்படவில்லை.

நவீன மருத்துவத்தில் கூட பாராசிடம்மல் கொடுத்தால் காய்ச்சல் குறையுமே தவிர எந்த காய்ச்சல் என்பதை அறிந்து அதற்கு தகுந்த மருத்துவம் அளித்தால் தான் காய்ச்சல் குணமாகும். காய்ச்சலால் மரணம் அடையும் நிலை கூட இன்றும் உள்ளது.

இந்த சூழலில் ஐ.ஐ.டி இயக்குனர் காமக்கோடியின் கருத்து மக்களுக்கு, பொது சுகாதரத்திற்கு எதிரானது.அந்த கருத்தில் அறிவியல் கிடையாது. பசு மாட்டை வைத்து அரசியல் செய்ய தான் இது போன்ற கருத்து உதவும். தமிழகத்தில் மாட்டரசியல் எடுபடவில்லை அதன் காரணமாக தான் இது போன்ற கருத்துக்கள் பரப்படுகிறது. இது மோசமான கருத்து.  காமகோடி அறிவியலை கூறவில்லை அரசியல் தான் செய்துள்ளார். இந்துத்துவா மதவெறி அரசியலை தமிழகத்தில் முன்னெடுக்கவே மாட்டை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

பல்வேறு மூட நம்பிக்கை கருத்து கூறவதன் மூலம் மக்களின் வரி பணத்தை ஐ.ஐ.டிக்கள் வீணடிக்கிறது. சிறிய ரத்த பரிசோதனை நிலையங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இளம் வயதில் பெண்கள் கருத்தரித்தல் அதிகரித்து வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என டிரம்ப் அறிவித்திருப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவே அந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என இந்திய அரசு அமெரிக்காவை வலியுறுத்த வேண்டும். கியுபாவை பயங்கரவாது நாடு என அமெரிக்கா அறிவித்ததை கண்டித்து 28 ஆம் தேதி அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்கிறோம்.

டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் மருத்துவர் என்றாலும் கூட அவர் ஒரு கட்சியில் இருப்பதால் எதோ நிர்பந்தத்தின் காரணமாக அவர் கோமியத்திற்கு ஆதரவான கருத்தை பேசி உள்ளார். தனிப்பட்ட முறையில் அவரும் கோமியம் அருந்துவதை ஏற்று கொள்ள மாட்டார் என தெரிவித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.