குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பாரதியார் நகர் பகுதியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி சேதமடைந்ததால் அதனை இடித்துவிட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. வ
புதிய தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதத்திற்கு மேலாகியும் குழாய் இணைப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் இன்றி கடந்த 6 மாதங்களாக கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். தன்னால் இன்று மணப்பாறை – புதுக்கோட்டை சாலையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசபெருமாள், ஞானப்பிரகாசம், சீகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அமுதவள்ளி செல்வராஜ், ஊராட்சி செயலாளர் பெரியசாமி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மணப்பாறை – புதுக்கோட்டை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.