குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

0 322
Stalin trichy visit

திருச்சி, ஆக.7  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலீ ஊராட்சியில் உள்ள கவுண்டம்பட்டி கீழுரில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருப்பைஞ்சீலீ ஊராட்சியில் உள்ள கவுண்டம்பட்டி கீழுரில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திற்கு கடந்த 3 மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது .மேலும் இதற்கு முன்னால் இருந்த குடிநீர் ஆபரேட்டர் தண்ணீர் திறக்க முடியாது புதிதாக ஒரு ஆபரேட்டர் நியமனம் செய்து தண்ணீரை திறந்து கொள்ளுமாறு ஊராட்சி தலைவரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுசம்பந்தமாக பஞ்சாயத்து நிர்வாகம் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக புகார் அளித்தும் குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திருப்பைஞ்சீலி மூவானூர் சாலையில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து காலி குடங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சாலை மறியலில் தொடரும் என பொதுமக்கள் கூறி மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஐந்து மணி நேரத்தில் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் சாலை மறியலால் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.