துறையூரில் மக்கள் நீதிமன்றம்; 423 வழக்குகளுக்கு சமரச தீர்வு!

0 268
Stalin trichy visit

உச்ச நீதிமன்றம் புதுடெல்லி தேசிய மக்கள் நீதிமன்றம் உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படியும், மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் ஆலோசனைப்படியும் திருச்சி துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான சிவகுமார் தலைமையில் துறையூர் சார்பு நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம்

நடைபெற்றது. இதில் துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆறுமுகம் மற்றும் துறையூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் புவியரசு ஆகியோர் தலைமையில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து சமரசமாக பேசப்பட்டது. சுமார் 625 வழக்குகளுக்கு மேல் கோப்பிற்கு எடுக்கப்பட்டு 423 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. (வங்கி வாராக் கடன்கள் 111 உட்பட) சமரச தீர்வு தொகையாக ரூ.1,87,33,682 தீர்வு காணப்பட்டது. மக்கள் நீதிமன்றத்திற்கான ஆலோசனை கூட்டம்

துறையூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்த பொழுது நீதிபதிகள் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் வாரிசு சான்றிதழ் பெற காலதாமதம் ஆகிறது இதனால் இனிவரும் காலங்களில் நீதிமன்ற உத்தரவு வழங்கும்போது வாரிசு சான்றிதழ் அன்றே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினர். வட்டாச்சியரும் நடவடிக்கை எடுப்பதாக நீதிபதிகள் முன்பு தெரிவித்தார். துறையூர் வட்டாட்சியர் ஒப்புக்கொண்டபடி வாரிசு சான்றிதழ்களை மக்கள் நீதிமன்றத்தில் உத்தரவு வழங்கிய அன்றே வாரிசு சான்றிதழ்களை வட்டாட்சியர் மற்றும் நீதிபதிகள் வழங்கினார்.

மக்கள் நீதிமன்றத்தில் துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மனோகரன், செயலாளர் தனசேகரன், அரசு வழக்கறிஞர் சந்திரமோகன், அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெயராஜ் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் கலந்துகொண்டு வழக்குகளை சமரச முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்ட சட்ட பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.