வருமான வரித்துறை கண்காணிப்பாளரிடம் 2 பவுன் நகை திருடியவர் கைது
திருச்சி ஜூன் 15 திருச்சி தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது 33) இவர் வருமான வரித்துறையில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தென்னூர் பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தில்லைநகர் வடவூர் பகுதியைச் சேர்ந்த பாம்பு சரவணன் (வயது 43 )மற்றும் இரண்டு பேர் சிவபாலன் அருகில் அமர்ந்து மது அருந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சிவபாலனிடம் பேச்சு கொடுத்து அவரை அப்பகுதியில் ஒரு சந்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் சிவபாலன் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாம்பு சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.