கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

0 79
Stalin trichy visit

திருச்சி ஜுன் 15  திருச்சி காஜா பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 39)இவர் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (வயது42) என்பவர் இருதயராஜிடம் ரூபாய் 500 கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி 500 பறித்து சென்று தப்பிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யராஜை கைது செய்தனர்.

இதேபோல் திருச்சி மண்ணச்சநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் வயது 32 எலெக்ட்ரிசியன். சம்பவத்தன்று இவர் சமயபுரம் பஸ் நிறுத்தத்தில் உள்ள கழிவறைக்கு சென்று வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிந்தாமணி பகுதியை சேர்ந்த சுல்தான் என்ற யோகேஸ்வரன் 19 என்பவர் ராம்குமாரை தாக்கி அவரிடம் இருந்த ரூபாய் 3000 கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சுல்தான் என்ற யோகேஸ்வரனை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.