இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு
திருச்சி, ஜன. 30 திருச்சி மாவட்டம் முசிறி கோட்டாட்சியர் ராஜனிடம் , துறையூர் தாலுக்கா உப்பிலிபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தனர்.
உப்பிலியபுரம் அம்பேத்கர் நகர் சர்வே எண் 185/2ல் 2000 வருடம் 68 வீட்டு மனைகள் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 24 வீட்டுமனைகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 15 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கோட்டாச்சியர் உரிய நடவடிக்கை எடுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் /மாவட்ட பொருளாளர் தனியரசன், துறையூர் தொகுதி செயலாளர் துரை சங்கர், உப்பிலியபுரம் நகர செயலாளர் குமார்மற்றும் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலருடன் இருந்தனர்.