போட்டோ – வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம்

0 261
Stalin trichy visit

துறையூர் தாலுகா போட்டோ ஸ்டுடியோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நாலாம் தேதி சனிக்கிழமை துறையூர் பாலக்கரை செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் சிவப்பிரகாசம் தலைமை ஏற்றார் செயலாளர் சன் சிவா அவர்கள் செயற்குழு உறுப்பினர்களை வரவேற்றார் பொருளாளர் அலெக்ஸாண்டர் துணைத் தலைவர் இளையராஜா முன்னிலை வகித்தனர். செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

சங்கத்தின் பைலா நகல் பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்து வாங்கும் செலவினும் 1850 செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது

சங்க சந்தா விரைவில் வசூல் செய்ய செயற்குழு உறுப்பினர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

சங்க அடையாள அட்டை வழங்க உறுப்பினர்களின் தற்போதைய விவரங்கள் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாது விபத்து காப்பீடு செய்ய வலியுறுத்தப்பட்டனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில் துணைச் செயலாளர் பாபு கௌரவ தலைவர் சேகர் செயற்குழு உறுப்பினர்கள் நடராஜ் மாதேஷ் மணி சசிகுமார் திருச்சி ஈசி ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் பி ஆர் ஓ சுரேஷ் பாபு நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.