தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 228
Stalin trichy visit

திருச்சி, நவ.28 மத்திய அரசு நிறைவேற்றியுள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர் மாநிலத் தலைவர் பொன் குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றி அதனை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த சட்டத்தொகுப்பால் தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு வாரியங்கள் கலையக்கூடிய ஆபத்து உள்ளது, மேலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும், நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தின கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும், எட்டு மணி நேர வேலை சட்டம் 12 மணி நேரமாக உயர்த்தப்படக்கூடிய ஆபத்து உள்ளது எனவே பல்வேறு வகைகளில் தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ள இந்த சட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தக் கட்சியின் தலைவரும் கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவருமான பொன் குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்

Leave A Reply

Your email address will not be published.