சோபனாபுரம் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறும் போலீசார்

0 665
Stalin trichy visit

திருச்சி, பிப். 5 திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தை அடுத்துள்ள சோபனாபுரத்தில் பி மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் விவசாயம் செய்து வருகிறார் இவர் கடந்த ஜூலை மாதம் அவர்கள் விவசாய நிலத்தின் அருகில் உள்ள வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்த அவரும் அவரது மனைவி சாரதா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளின் தீவிரமாக தேடி வந்தனர்

இந்நிலையில் குற்றச்சம்பவம் நடந்து ஏழு மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றவாளி யார் என தெரியவில்லை மேலும் ஐந்து தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவரும் நிலையில் 1937 துவங்கப்பட்ட உப்பிலியாபுரம் காவல் நிலைய வரலாற்றில் நடந்த முதல் இரட்டை கொலை சம்பவம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

உப்பிலியாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு இந்த கொலை வழக்கு மிகுந்த சவாலாக உள்ளது இந்த கொலை வழக்கில் சம்பந்தமுள்ள குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறைக்கு ராஜ்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.