பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்க மத்திய செயற்குழுக் கூட்டம்
திருச்சி, டிச.29 தமிழ்நாடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மத்திய செயற்குழு கூட்டம் சங்கத் தலைவர் முள்ளைவளவன் தலைமையில் துவாக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மாதாந்திர பயணப்படி வேண்டி விண்ணப்பித்து பல மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர் இவர்களது விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு மாதாந்திர பயணப்படியை அவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி ஆணையர்க்கு வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்பட்டது மற்றும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்பு பயிலகங்களில் 2022 ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட விரிவுரையாளர்களுக்கு பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை பனி வரன்முறை ஆணை வழங்கப்பட வேண்டும் இது போன்ற பல்வேறு தீர்மானங்கள் செயற்குழு உறுப்பினர்கள் கருத்துக்களை கேட்ட பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்