மோசமான நிலையில் பொன்மலை “நார்த் – டி சாலை” – சீரமைக்க கோரிக்கை
திருச்சி, நவ.17 மோசமான நிலையிலுள்ள பொன்மலை”நார்த் டி” சாலையை சீரமைக்க வேண்டுமென வாகனயொட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்மலை ரயில்வே பணிமனையிலிருந்து “நார்த் டி” கேட் வழியாக செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது. தற்பொழுது பணிமனையில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்வதால் “நார்த் டி” கேட் வழியாக வந்து செல்லும் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், இருசக்கர வாகனத்தல் வருபவர்களும், நடந்து வருவர்களும் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகிறார்கள். மாலை நேரத்தில் ரயில் நிலையம் செல்ல முடியாமல் மிகவும் சீரமப்படுகிறார்கள். எனவே ரயில்வே நிர்வாகம் “நார்த் டி” கேட்டியிலிருந்து பொன்மலை, மற்றும் மஞ்சத்திடல் ரயில் நிலையம் செல்லும் மண் பாதையை தார்சாலை அமைத்து தருமாறு பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
