காவல்துறையினருக்கு ஒரு நாள் யோகா பயிற்சி

0 275
Stalin trichy visit

திருச்சி, நவ.17 சக்தியோகாலயா மற்றும் திருச்சி மாநகர காவல்துறை இணைந்து இன்று ஒரு நாள் யோகா பயிற்சி வகுப்பு திருச்சி மாநகர காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டது. இதில் 160 காவல்துறையினர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்நிகழ்வில் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர், உதவி ஆணையர் நுண்ணறிவு பிரிவு , கூடுதல் துணை ஆணையர் , காவல் ஆய்வாளர் மாநகர ஆயுதப்படை , திருச்சி மாவட்ட கைப்பந்து சங்கத் தலைவர் தங்கப்பிச்சையப்பா, சக்தியோகாலயா நிறுவனத்தின் நிறுவனர் இளையராஜா ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஒரு நாள் யோகா பயிற்சிக்கு திருச்சி மாநகர காவல்துறை மற்றும் சக்தி யோகாலயா நிறுவனம் ஏற்பாடு செய்தது. இந்நிகழ்விற்கு மிகச் சிறப்பாக உதவி புரிந்த திருச்சி மாநகர காவல்துறைக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் சக்கி யோகாலயா குழுமத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.