நன்னிமங்கலம் பகுதியில் நாளை மின்தடை
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி லால்குடி செயற்பொறியாளர் அன்புசெல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
லால்குடி பூவாளூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் நன்னிமங்கலம் உயரழுத்த மின்பாதையில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை பின்னவாசல், மணக்கால் கிழக்கு, கொப்பாவளி, வழுதியூர், நன்னிமங்கலம், நடராஜபுரம், படுகை, சாத்தமங்கலம் மற்றும் ஆனந்திமேடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.