கல்லக்குடி பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

0 262
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை 24 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம்.

கல்லக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான கல்லக்குடி, வடுகர் பேட்டை, பளிங்காநத்தம், முதுவத்தூர், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணனூர், ஒரத்தூர்,சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், வந்தலை கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர்,குமுளூர், தச்சங்குறிச்சி, புஞ்சை சங்கேந்தி, வி்.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூர் பாளையம், ஆலம்பாக்கம் ,விரகாலூர், ஆலம்பாடி மேட்டூர், விளாகம், குலமாணிக்கம், நத்தம், திருமாங்குடி,டி. கல்விக்குடி, ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர், கல்லகம், கீழ அரசூர், மற்றும் புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்கலும் காத்தலும் லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்பு செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.