ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்க உதவும் பிராணயாம பயிற்சிகள்
திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் ஆஸ்துமா சளி பிரச்சனைகளை குறைக்கவும் பிராணயாம பயிற்சி வகுப்பு நூலகத்தில் நடைபெற்றது நூலகர் புகழேந்தி வரவேற்றார். அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்க உதவும் பிராணயாம பயிற்சி
அளித்து பேசுகையில்,
குளிர், மழைக் காலங்களில் சைனஸ், ஆஸ்துமா, சளி, காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், முன்பக்கத் தலைவலி, மூக்கில் இருந்து நீராகக் கொட்டுதல், உடல் கதகதப்புக் குறைதல், உடல்வலி போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுற்றுசூழல் மாசினால் சுவாசப் பாதையில் கழிவுகள் தேங்கும். இதனால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், சமச்சீரான உணவினை உண்ணாதவர்களுக்கும், சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கும் உடல் உபாதை எளிதாக ஏற்படும். ஆஸ்துமா, சளி போன்றவை ஏற்பட்டால், நீண்ட நாள்களுக்கு சில கழிவுகள் உடலில் தேங்கிவிடும். அவற்றை முதலில் வெளியேற்ற வேண்டியது அவசியம். அவை வெளியேறவும், ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் உள்ளன. இதற்கு கிரியா பயிற்சிகளும் மூச்சுப்பயிற்சிகளும் உதவும். நுரையீரலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற கபாலபாதி பயிற்சி உதவும். ஒரு நிமிடத்துக்கு 120 முறை மூச்சை வெளியேற்ற வேண்டும். தினமும் நாம் சுவாசிக்கும் அசுத்தக் காற்றிலிருக்கும் தூசிகள் கழிவுகளாக உடலில் தேங்கியிருக்கும். இந்தப் பயிற்சியைச் செய்தால், அவை அனைத்தும் வெளியேறும். நாள்பட்ட சளி மற்றும் மூச்சுவிட சிரமப்படுவர்கள் இதை தொடர்ந்து செய்யலாம்.மேலும் ஜல தேதி கிரியா பயிற்சியினை
மேற்கொள்ளலாம்.இப் பயிற்சியால் மூக்கடைப்பு, சளி, தும்மல் போன்றவை குறையும். சைனஸ், ஆஸ்துமாவிலிருந்து மெள்ள மெள்ள விடுபடலாம் என்றார்.