அரசுப் பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை

0 258
Stalin trichy visit

வேலைவாய்ப்பு பதிவில் முன்னுரிமை தமிழக அரசுப்பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்ற நபர்கள்

முன்னுரிமையினை பதிவு செய்தல்.

துமிழகஅரசின்அரசாணை(நிலை)எண்:122,மனிதவளமேலாண்மை (கே.2)த்துறை, நாள் : 02.11.2021-ன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் பதிவுதாரர்கள், தமிழக அரசுப்பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்றுள்ளவர்களாயின், அதற்கான முன்னுரிமையினை பெற தகுதியுடையவராவார்கள். இவ்வரசாணையின்படி, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள், தமிழக அரசுப்பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றிருப்பின் அதற்கு உரிய சான்றுகளுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்னுரிமையினை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.