வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் : மேயர் ஆய்வு

0 253
Stalin trichy visit

திருச்சி, செப். 20 வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்று மேயர் மு. அன்பழகன் கூறினார். திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1வது,மண்டலம் 3வது,மண்டலம் 4வது,மண்டலம் மற்றும் 5வது மண்டலம் ஆகிய அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன் மண்டல குழு தலைவர்கள். மு. மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் அந்தந்த மண்டலத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் தல 3 மின்மோட்டார்கள் 5ஆயில் இன்ஜினீகள், 10 எச்பி மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரம், புதைவடிகால் மண் அடைப்பு எடுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் ப்ளீச்சிங் பவுடர் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை மேயர் இன்று பார்வையிட்டார்
மழை காலத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது மாநகராட்சி பகுதியில் அதிகம் அளவில் தண்ணீர் தேங்கும் டோபி காலனி, ராஜீவ் காந்தி நகர், ஆதிநகர், பாத்திமா நகர், ஏயூடி நகர் ,கிருஷ்ணாபுரம்,துளசிங்க நகர் ஆகிய இடங்களில் தண்ணீர் உடனடியாக அகற்ற 2 எச்பி டீசல் மோட்டார் கொண்ட நீர் ஊற்று நிலையம் அமைக்கப்பட்டு, 2 மின்மாட்டார்களும் வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதியில் மழைநீர் எங்கும் தேங்காத அளவுக்கு மாநகராட்சி முழுவதும் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வரப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள திருச்சி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என மாநகராட்சி மேயர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் செயற்பொறியாளர்கள் கே.எஸ். பாலசுப்பிரமணியன், கே.பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர்கள் வைத்தியநாதன், ரமேஷ் குமார், சண்முகம், சதீஷ்குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.