ஏரி, குளங்களை தனிநபருக்கு ஏலம் விடுவதை தடை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

0 444
Stalin trichy visit

தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம், செயலாளர் சதீஷ்குமார், துணை செயலாளர் ஆர்.கே.ராஜா, கே.கே. பாய்ஸ் குமரசன், சந்துரு ஆகியோர் நேற்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் அளித்த மனுவில், ஏரி, குளங்களை உள்ள நீர் வேளாண்மைக்கும், ஆடு,மாடு, பறவைகளுக்கும், மற்றும் நிலத்தடிநீர் உள்ளீட்ட சூழலை நிரந்தராக காத்திட ஏலம் விடுவதை நிரந்தரமாக தடை செய்து உத்தரவிட வேண்டுகிறோம்.நீர் நிலைகளை தனிநபர் கைகளுக்குச் செல்லாமல் தடுத்து ஊரகப் பகுதிகளில் ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து மீன் பிடித்திருவிழா முறையை பின்பற்றிட உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் கே.சாத்தனூர் பகுதியிலுள்ள கணக்கன் குளம் ஏலம் விடுவதை தற்காலியமாக நிறுத்தி வைத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் நிரந்தரமாக குளங்களை மீன் பிடிக்க ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.