அதிவேகமாக பேருந்தை இயக்கியதை தட்டி கேட்ட பயணியை ஆபாச வார்த்தையால் திட்டி, தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர் : நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை
திருச்சி, ஜன.30 திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் மிக வேகமாக பேருந்து இயக்கியதை தட்டி கேட்ட பயணியை ஆபாச வார்த்தையால் திட்டி, சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர். நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு சங்கர் என பெயரிட்ட (( TN 45BP 5345)) தனியார் பேருந்தை எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த டிரைவர் அன்புராஜ் இயக்கி உள்ளார். அந்த தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தை மிகவும் வேகமாகவும் ஆபத்தான முறையிலும் இயக்கியதாக கூறபடுகிறது. இந்நிலையில்
பேருந்து பயணம் செய்த பயணி ஒருவர் இவ்வளவு வேகமாக ஓட்டாதீர்கள் அல்லது என்னை இறக்கி விட்டு விடுங்கள் என ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கேட்டுள்ளார். அதன் பின்பு வேண்டுமென்றே மிகவும் ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கி உள்ளார். மேலும் பேருந்தை வேகமாகவும், ஆபத்தான முறையில் இயக்க வேண்டாம், என பயணி தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்துள்ளார். அதன் பின்பு திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வந்தவுடன் அந்த ஓட்டுநர் தன் பேருந்தில் பயணித்த அந்த பயணியை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக திட்டி, சரமாரியாக தாக்கியுள்ளர். வயதான முதியவர் என்று கூட பாராமல் ஓட்டுநர் ஆபாச வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் திருச்சி மாநகரில் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பலமுறை பல விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகமும் அரசும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
வயதான பயணி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் திருச்சியில் தனியார் பேருந்துகளில் ஆதிக்கத்தையும் வன்முறையையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.