பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி திருச்சியில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டம்

0 13
Stalin trichy visit

திருச்சி ஜூலை 25  ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சமூக பாதுகாப்பும், பணி நேரத்தில் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்தினார்கள் திருச்சியில் போராட்டம்

சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொருளாளர் அண்டனிசுரேஷ் தலைமையில் கண்டன போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

கண்டன உரையை சிஐடியு மாவட்ட செயலாளர் வெங்கராஜன், மாவட்ட தலைவர் மணிமாறன், சாலை போக்குவரத்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் பஸ் ஓட்டுநர் நடத்துநர்களுக்கு ESI PF வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சத்திரம் பேருந்து நிலையத்தில் உடைமாற்றும் அறை மற்றும் ஓய்வறை அமைத்து தர வேண்டும், அடிப்படை சம்பளம் வழங்கி நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து பஸ் நிலையங்களிலும் நேரம் காப்பாளரை நியமித்திட வேண்டும், தனியார் பஸ் ஓட்டுநர்களுக்கு –  நடத்துநர்களுக்கு சமூக பாதுகாப்பும் பணி நேரத்தில் பாதுகாப்பும், வருடம் 2 முறை காக்கி சீருடை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.