பட்டா நிலம் எனக்கூறி இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு
திருச்சி, செப்.10 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணியம் கிராமத்தில் இறந்தவரின் உடலை தனது வீட்டு வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடலை எடுத்துச் சென்றனர்.
லால்குடி அருகே திண்ணியம் ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நாராயணசாமி. இவரது மனைவி மதுரம் (வயது 55) இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி மருதம்பாள் ஆகியோருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் சுப்பிரமணி அண்மையில் உடல்நலக் குறைவால் உயிரழந்தார். இந்நிலையில் நாராயணசாமி மனைவி மதுரம் நேற்று காலை உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார் இவரது உடலை அதே பகுதியைச் சேர்ந்த மருதாம்பாள் மற்றும் மருதம்பாளின் கொழுந்தனார் தர்மராஜ் ஆகியோர் வீட்டு வழியாகத்தான் சடலத்தை எடுத்துச் செல்ல முடியும் .
இந்த காளியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர்கள் உயிரிழந்தால் சடலத்தை சுப்பிரமணி மற்றும் அவரது தம்பி தர்மராஜ் ஆகியோர் வீட்டு வழியாகத்தான் எடுத்து செல்ல வேண்டும் .இந்த வழியாக சடலத்தை எடுத்துச் செல்லக்கூடாது இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது இது எங்களது பட்டா நிலம் எனக் கூறி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் சுப்பிரமணி மற்றும் அவரது தம்பி தர்மராஜ் குடும்பத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை உயிரிழந்த மதுரம் உடலை மேற்படி வழியாக எடுத்துச் செல்ல கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் லால்குடி தாசில்தார் ஞானமிர்தம் துணை தாசில்தார் வனஜா மற்றும் லால்குடி காவல் ஆய்வாளர் கருணாகரன் (பொறுப்பு) உள்ளிட்டோர் தர்மராஜ் மற்றும் சுப்பிரமணி மனைவி மருதாம்பாள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாராயணா சாமி மனைவி மதுரம் உடலை அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் புதைப்பதற்கு எடுத்து சென்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து இதுபோன்ற உயிரிழப்பு ஏற்பட்டால் இந்த பாதை பிரச்சனை ஏற்பட்டு வருகிறது எனவே எங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளிடம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மக்கள் வலியுறுத்தினார்