TDS தவறாக திரும்பப் பெற முயற்சித்தால் சட்ட நடவடிக்கை : வருமானவரி முதன்மை ஆணையர் எச்சரிக்கை
திருச்சி செப் 10 TDS தவறாக திரும்பப் பெற முயற்சித்தால் கூடுதல் வரிகள், வட்டி, அபராதம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – மதுரை வருமானவரி முதன்மை ஆணையர் எச்சரிக்கை
திருச்சி வருமானவரித் துறை மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் இணைந்து வருமானவரி களத்தொடர்பு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி செய்யும் 200 மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், மதுரை வருமானவரி முதன்மை ஆணையர் வசந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் திருச்சி வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் நித்யா, வருமானவரி துணை ஆணையர் இரா. கார்த்திக், அதிகாரி கணேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுரை வருமானவரி முதன்மை ஆணையர் வசந்தன்
2024 25 இந்தியா முழுவதும் 22.26 லட்சம்கோடி வசூலிக்கப்பட்டது. முந்தைய வருடத்தை 13.71 சதவீதம் அதிகரித்துள்ளது. மதுரை மண்டலத்தில் பார்க்கும் பொழுது அதாவது 19மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளடக்கிய 20 இடங்களை கணக்கிடும் பொழுது கடந்த 24 – 25 ஆம் ஆண்டு 3361 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது 5சதவீதம் குறைவாக உள்ளது. இது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. எதனால் இந்த வசூல் குறைவாக உள்ளது? ஏன் குறைவு? என்ன பிரச்சனை உள்ளது. காரணம் என்ன என்பது குறித்து கண்டறிந்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஊழியர்களுக்கான வருமானவரி விதிகள், படிவங்கள் கழிவுகள் மற்றும் பிடித்தங்கள் குறித்து விலக்கப்பட்டது. தவறான தகவல்கள், முறையற்ற கழிவு கோரல்கள் மற்றும் கோரிய கழிவுகளுக்கான ஆதாரம் இல்லாத நிலை ஆகியவற்றின் பின்விளைவுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில், DDOக்களால் TDS கழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலோ அல்லது பிறரால் தவறாக வழி நடத்தப்பட்டோ, தேவையான ஆவண ஆதாரங்கள் இல்லாமல் தவறான விலக்கு, கழித்தல் கோரிக்கையுடன் தங்கள் வருமான அறிக்கையை தாக்கல் செய்கிறார்கள். இதன் விளைவாக, மொத்த வருமானம் மற்றும் அதன் மீது செலுத்த வேண்டிய வரி குறைகிறது. அதனால் DDOக்களால் கழிக்கப்படும் TDS தவறாக திரும்பப் பெறுவதாகக் கோரப்படுகிறது. இது வரிப் பொறுப்பைக் குறைப்பதற்கான ஒரு சட்டவிரோத வழியாகும். மேலும், இது கூடுதல் வரிகள், வட்டி, அபராதம் மற்றும் சட்டவழக்குத் தொடரப்படுவதற்கும் வழிவகுக்கும். இது போன்ற சந்தர்பங்களில் புதுப்பிக்கப் பட்ட வருமானவரிப் படிவம் சமர்ப்பிப்பதின் அவசியம்.
TDSதொடர்பாக இதுவரை சுமார் 4000நபர்களுக்கு வருமான வரித்துறையினரால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.