கல்குவாரியில் கிரஸர் அமைவதற்கு எதிர்ப்பு : சாலை மறியல்
திருச்சி, பிப். 18 மணப்பாறை அருகே கிரஷருக்கு அனுமதி வழங்கிடக்கூடாது என்று கூறி மக்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ரெட்டமலைப்பட்டி அருகே கிரஷர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடைகளை மட்டுமே மக்கள் நம்பி வாழ்ந்து வரும் நிலையில் கிரஷருக்கு அனுமதி கொடுத்தால் அந்த பகுதி மக்களின் நிலை மிக மோசமாகி விடும். ஆகவே அரசு கிரஷருக்கு அனுமதி கொடுக்ககூடாது என்று கூறி மணப்பாறை – ரெட்டியபட்டி சாலையில் குளத்துராம்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களின் கருத்தை பெற்று தான் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை என்று பேச்சுவார்த்தையில் தெரிவித்ததை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.