தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி ஆக 2 – பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி.அனுராக் தாகூர் அவதூறாக பேசியதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அறிவிப்பின்படி திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி துவாக்குடி நகராட்சி அண்ணா வளைவு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பி. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது .
வாக்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார். திருவெறும்பூர் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில்குமார் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரகுவரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் துவாக்குடி முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வையம்பட்டி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் செல்வம் ராதாகிருஷ்ணன் மணப்பாறை வட்டார தலைவர் சிவ சண்முகம் மாவட்ட துணைத் தலைவர் சுப.கோவிந்தன் மாவட்ட செயலாளர்கள் குணசேகரன் சின்ராஜ்
மணி பரணி வட்டார நிர்வாகிகள் கூத்தைப்பார் மாணிக்கம் அருணாச்சலம் கும்பக்குடி தங்கவேல் மணி சக்திவேல் வெங்கடாசலம் நகர நிர்வாகிகள் சந்திரமோகன் சிவக்குமார் ரவி சாலமன் ராஜ் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.