கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, டிச.18 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இதில் தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கு உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதித்து ஆணையிட வேண்டும் ஊராட்சி செயலாளர் பனிக்காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் பயன்கள் பெற அரசாணை வெளியிட வேண்டும் காலம் முறை ஊதியத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வு ஊதியமாக அனுமதிக்க ஆணையிட வேண்டும் மேலும் ஊராட்சி ஒன்றிய பணி ஓய்வூதியர்களின் வைப்பு நிதி தொகை காண வட்டி தொகை தாமதம் இன்றி அனுமதித்து விரைவில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்