தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

0 245
Stalin trichy visit

திருச்சி, ஆக.25  ஏஐடியுசி தலைமையிலான தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 25ல் மாநிலம் தழுவிய வட்டார அளவிலான ஆர்ப்பாட்டம் மணிகண்டம் ஒன்றிய குழு சோமரசம்பேட்டை ஊராட்சி மன்றம் முன்பாக காலை 11 மணி அளவில் திருச்சி மாவட்ட தலைவர்  M.R. முருகன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்த ஏழு நாளும் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறவேண்டும், ஞாயிறு விடுமுறையை கட்டாயமாக்க வேண்டும்,குப்பைகளை வாங்குவதற்கு பேட்டரி வாகனங்கள் வழங்க வேண்டும்,தினசரி 160 ரூபாய் என்கிற ஊதியத்திற்கு நான்கு மணி நேரம் மட்டுமே வேலை செய்வோம் என்று கோஷமிட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். AITUC மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் க. சுரேஷ் மாவட்ட தலைவர் தோழர் வே. நடராஜா மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழியர் கனகவள்ளி உள்ளாட்சி செயலாளர் தோழியர் J. நதியா உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

போராட்டத்தில் பெண்கள் கட்டட சங்க மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர்  M. மருதாம்பாள் மாதர் சங்க ஒன்றிய பொருளாளர் M. ரஜியாபேகம் தரைக்கடை சங்க ஒன்றிய செயலாளர் K. மேகராஜ் இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர்  A. இன்ன சென்ட் விமலா மேரி துணைத் தலைவர்  C. ஜெயபால் மாதர் சங்க துணை தலைவர்  B. பல்கீஸ்பானு உள்ளிட்ட பல்வேறு பஞ்சாயத்தில் இருந்து தூய்மை காவலர்களும் பஞ்சாயத்து மோட்டிவேட்டர் உள்ளிட்டோரும் பங்கேற்பு சோமரசம்பேட்டை S. விமலா நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.