திருச்சி மாநகரில் தொடர் திருட்டுக்களால் பொதுமக்கள் அச்சம்

0 298
Stalin trichy visit

திருச்சி, ஜன.25திருச்சி மாநகரில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருச்சி பெரிய கடை வீதி அருகே 20வது வார்டுக்குட்பட்ட மளிகைக்கார தெரு, ராணி தெரு, வடக்கு ராணி தெரு, சௌராஷ்ட்ரா தெரு, சுண்ணாம்பு கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எம்எல்ஏ இனிகோ இருதய ராஜ் மற்றும் 20வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் எல்ஐசி சங்கர் ஆகியோரிடம் தெரிவித்தும்‌ இதுவரை குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்பட்டாலும் ஆளும் கட்டியினரின் சிபாரிசால் சுலபமாக பிணையில் வந்து மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து பேர் அப்பகுதியில் உள்ள வாழைப்பழம் விற்பவரை கத்தி காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர் அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அவர்கள் பிடிக்க முயற்சி செய்தபோது இரண்டு பேர் சிக்கினர் மற்றவர் தப்பி ஓடினர். அவர் இருவரும் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர் இது போல் தொடர் சம்பவங்களால் ஏற்கனவே பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் திருச்சி காந்தி மார்க்கெட் அடுத்துள்ள 20-வது வார்டு பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த மாதத்தில் இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், செல்போன் திருட்டு சம்பவங்கள், வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட உள்ள நிலையிலும் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது இது அப்பகுதி பொதுமக்களிடையே பயத்தையும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே உடனடியாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டு வளையல் கார தெரு, ரங்கசாமி செட்டியார் தெரு, காந்தி மார்க்கெட் பகுதி, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கஞ்சா போதையில் இளைஞர்கள் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர், இதனால் திருச்சி மாநகரில் வசிப்பதற்கு அச்சமாக உள்ளது என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் அலட்சியப் போக்கால் இரவு நேரங்களில் திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் பயங்கர ஆயுதங்களுடன் கஞ்சா போதையில் இளைஞர்கள் பல்வேறு விரோத செயல்களில் ஈடுபடுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.