திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

0 586
Stalin trichy visit

திருச்சி, ஜன.25  திருச்சி தெற்கு மாவட்ட சார்பாக மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்பு.
தமிழ்மொழி காக்க உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினார்கள்.
மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் .
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மண்டல குழு தலைவர் மதிவாணன் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன்,
கே என் சேகரன், சபியுல்லா, மற்றும் மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.