ரேஷன் கடையில் பி.ஓ.எஸ். கருவியுடன் மின்னணு தராசு இணைப்பால் பொதுமக்கள் கடும் அவதி

0 262
Stalin trichy visit

திருச்சி, செப். 8 ரேஷன் கடையில் பி.ஓ.எஸ். கருவியுடன் மின்னணு தராசு இணைப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பல நேரம் வரிசையில் நிற்கவேண்டி இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பொதுவிநியோக திட்டத்தின் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் தமிழகம் முழுவதும் மொத்தம் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். (பாயிண்ட் ஆப் சேல்) என்னும் மின்னணு கருவி மூலம் பொருட்கள் விநியோகத்திற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள், ஸ்மார்ட் கார்டுன் சென்று கைரேகை வைத்தால் மட்டுமே ரசீது போடும் வகையில் இந்த கருவியின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கைரேகை பதிவு 90 சதவீதம் ஒத்துப்போனால்தான் ரசீது போட முடியும் என்ற நிலையில் கைரேகை பதிவு செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆலோசித்து கைரேகை பதிவு 90 சதவீதம் ஒத்துப்போதல் என்பதை 70 சதவீதம் ஒத்துப்போனாலே ரசீது போடலாம் என்ற அளவிற்கு மாற்றார்கள்.. தற்போது கைரேகை பதிவு ஓரளவு எளிதாகி விட்டது,.

ஆனால் அதே நேரத்தில், தற்போது எடை போடும் கருவியும் ‘புளூடூத்’ அல்லது கேபிள் மூலம் ‘பி.ஓ.எஸ்.’ கருவியுடன் இணைக்கப்பட்டு ஒவ்வொரு பொருளின் எடையும் துல்லியமாக இருந்தால் மட்டுமே ரசீது போட முடியும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இந்த புதிய முறையால் பல மணி நேரம்வரை பொதுமக்கள் ரேஷன் கடையிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஏனெனில் எடை எந்திரம் மற்றும் ‘பி.ஓ.எஸ்.’ கருவியை இணைப்பதற்கான இணையதள வேகம் குறைவாக இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான கடைகளில் ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் சொந்த செல்போனில் உள்ள ‘டேட்டா’வை பயன்படுத்தி பி.ஓ.எஸ். கருவியை இயக்கி வருகிறார்கள். எனவே, ரேஷன் கடையில் உள்ள பி.ஓ.எஸ் கருவிக்கான இணையதள வேகத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது தனி பிராட் பேண்டு இணைப்பு வழங்க வேண்டும்.

மேலும் பி.ஓ.எஸ். கருவியானது ‘சிம்’ கார்டு மூலம் இயங்குகிறது. சிம் கார்டு மூலம் வழங்கப்படும் இணையதள சேவைக்கு தகுந்த கட்டமைப்பு பி.ஓ.எஸ். கருவி இருக்க வேண்டும். இணையதள சேவையை 5ஜி அளவிற்கு உயர்த்தி, அதற்கு தகுந்தாற் போன்ற உட்கட்டமைப்புகளை பி.ஓ.எஸ். கருவியிலும் மாற்றம் செய்தால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

எனவே தமிழ்நாடு அரசும், பொதுவிநியோக திட்டத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.