பொதுப்பணித்துறை நீர்வளத்துறை பணியாளர்கள் நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

0 182
Stalin trichy visit

திருச்சி, நவ.11  மணப்பாறை அடுத்த பொன்னணியாறு அணையில்பொதுப்பணித்துறை நீர்வளத்துறை பணியாளர்கள் நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள
பொன்னணியாறு அணையில்பொதுப்பணித்துறை நீர்வளத்துறை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முசிறி ரமேஷ் தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் மணிமாறன் கலைமணி பழனிசாமி அப்துல் ரஹீம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்

இந்த கூட்டத்தில் பொதுத்துறை நீர்வளத்துறை தினக்கூலி பணியாளர்கள் அரசாணை 233/ 2019 மணப்பாறை பொன்னியாறு அணையில் உள்ள பணி விடுபட்ட 13 நபர்களின் விபரங்களை பெற்று அவர்களுக்கு தோப்பூதியம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

மணப்பாறை பொன்னுனியாறு அணையில் உள்ள 13 நபர்களில் 10 ஆண்டுகள் முடிவடைந்த நபர்களின் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை பணியாளர்கள் விடுபட்ட 55 பணியாளர்களுக்கு அரசாணை 233 கீழ் பணி அமர்த்திட வேண்டும் என்றும் இதற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் சென்னை கலைஞர் சமாதி முன் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள்

இந்த கூட்டத்திற்கு நிறைவாக பானு கோபிநாத் நன்றி உரையாற்றினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.