விபத்தில் உயிரிழந்த த.வெ.க. நிர்வாகிகளுக்கு வீரவணக்கம்

0 210
Stalin trichy visit

திருச்சி, நவ.11  கடந்த மாதம் 27 ம்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக முதல் மாநாட்டிற்கு திருச்சியில் இருந்து சென்ற மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன் மற்றும் உறையூர் கலை ஆகிய இருவரும் உளுந்தூர் பேட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களுக்கு திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி தவெக சார்பில் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கரிகாலன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. உயிரிழந்த இருவரது உருவ படங்களுக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் நகர இளைஞரணி தலைவர் திருப்பதி, மாவட்ட நிர்வாகி கதிரவன், மருங்காபுரி ஒன்றிய தலைவர் சேகர், மணப்பாறை நகர தலைவர் அழகர், ஒன்றிய தலைவர் ராஜேஷ், ஒன்றிய நிர்வாகிகள் சந்திரன், குணா, பார்த்திபன், குமார், பாண்டியன், வழக்கறிஞர் பிரபு பாண்டியன் உள்ளிட்ட திருச்சி தெற்கு மாவட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.