முசிறி, துறையூர் (தனி) தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

0 392
Stalin trichy visit

முசிறி கோட்டதிற்கு உட்பட்ட முசிறி, துறையூர் (தனி) தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை விபரம்.

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதிதாக பெயர் சேர்த்தல் நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முசிறி கோட்டாட்சியர் மாதவன் தலைமை வகித்து முசிறி மற்றும் துறையூர் (தனி) தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட அரசியல் கட்சியினர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்விற்கு வட்டாட்சியர்கள் சண்முகப்பிரியா, சத்திய நாராயணன், புஷ்பராணி முன்னிலை வகித்தனர். புதிய வரைவு வாக்காளர் பட்டியலின்படி முசிறி தொகுதியில் ஒரு லட்சத்து 10, 158 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 932 பெண் வாக்காளர்களும் 22 இதர வாக்காளர்களும் சேர்த்து இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 112 வாக்காளர்கள் உள்ளனர்.
துறையூர் (தனி) தொகுதியில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 566 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 910 பெண் வாக்காளர்களும் 19 இதர வாக்காளர்களும் சேர்த்து 2 லட்சத்து 22 ஆயிரத்து 495 வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர் பட்டியல் கோட்டாட்சியர் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது மேலும் நவம்பர் 12 13 26 27 ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறும் இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் பட்டியல் அதிக குளறுபடியுடன் காணப்பட்டது எனவும் அதை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோட்டாட்சியர் மாதவன் உரிய மனு அளித்தால் சரி செய்யப்படும் என கூறினார். கூட்டத்தில் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.