புள்ளம்பாடி குளுந்தாளம்மன் கோவில் சித்திரை தேரோட்ட விழா

0 440
Stalin trichy visit

புள்ளம்பாடி குளுந்தாளம்மன் கோவில் சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் குளுந்தாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் கடந்த மாதம் காப்புக்கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.அதனைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து மறுகாப்பு கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவிழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தினமும் இரவில்
அன்னம், மயில், சிம்மம், காமதேனு, ரிஷபம், யானை, குதிரை போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதியுலா வந்து அருள் பாலித்தார். இதில், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதோடு தினமும் மாலை 6 மணிக்கு அலங்கார மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது.
தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்றுஙநடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு நகர பொதுமக்களின் சார்பில் செண்டைமேளம் முழங்க அம்மன் விக்ரகத்தை ஊர்வலமாக எடுத்து வந்து தேரில் வைத்தனர். அப்போது அம்மனுக்கு பலி காணிக்கை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

இதில் புள்ளம்பாடி, இ.வெள்ளனூர், பு.சங்கேந்தி, கோவண்டாகுறிச்சி, கல்லக்குடி, செம்பரை, ஆலம்பாடி மேட்டூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் திருப்பணி குழுவினர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு பணியில் லால்குடி டி.எஸ்.பி அஜய்தங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபு கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.