துறையூரில் புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது.இது தென்திருபதி என்று அனைவராலும் அழைக்கபடுகிறது
வைணவ தளங்களில் விபூதி வழங்கும் ஒரே திருத்தலமாகும் இங்கு
வருடம் தோறும் புரட்டாசி மாதம் வெகு விமர்சையாக திருவிழா கொண்டாடப்படும்
மலை மேல் உள்ள பெருமானை தரிசிப்பதற்காக தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவார்
இக்கோவிலானது கிபி 11ம் நூற்றாண்டில் கரிகால சோழனின் பரம்பரை மன்னரால் கட்டப்பட்டது தற்போது கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது தற்போது புரட்டாசி மாதம் என்பதால் மலை மேல் உள்ள சாமியை தரிசிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது சுமார் 1540 படிகளுக்கும் வர்ணங்கள் பூசப்பட்டுள்ளது.

மலை மேல் உள்ள கோவில் கோபுரத்தில்
புரட்டாசி மாதம் தோறும் திருவிழாவை கொண்டாடுவதற்கு
வண்ண விளக்குகளான மின்விளக்குகள் அலங்கரிக்கப்படும் மற்றும் 1540 படிக்கட்டுகளை பக்தர்கள் கடந்து செல்வதற்கு ஏற்றவாறு மின்விளக்குகளும் இரவு நேரங்களில் எரிய விடப்படும் மாதம் 30 நாட்களும் பிரகாசமாக கோவில் காட்சி அளிக்கும்
ஆனால் தற்போது புரட்டாசி மாதம் பிறந்து 4க்கு நாள்கள் ஆகியும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மாலை நேரத்தில் கீழே இறங்குபவர்களுக்கு பாதுகாப்பான போதுமான் மின் விளக்குகள் இல்லாமல் கோவில் இருளில் முழ்கும் நிலைக்கு சென்றுள்ளதாகவும்கோவில் நிர்வாகம் இதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல் பக்தர்கள் பாதுகாப்பில்
அலட்சியம் காட்டுவதாகவும்பக்தர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
இது அடர்ந்த காடுகள் உள்ள மலை பகுதியாகும் . எனவே பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோயில் நிர்வாகம் இரவு நேரங்களில் படிக்கட்டு வழியாக மலை ஏறும் பக்தர்கள் பாதுகாப்பாகாப்பை உறுதி செய்ய இரவு நேரங்களில் மின் விளக்கை எரிய விட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்