தமிழர் தேசம் கட்சியின் பாராளுமன்ற தொகுதி மீட்பு ஆலோசனைக் கூட்டம்

0 488
Stalin trichy visit

மணப்பாறை அருகே வையம்பட்டியில் தமிழர் தேசம் கட்சியின் பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாட்டு ஆலோசனைக்கூட்டம்.

தமிழர் தேசம் கட்சியின் சார்பாக பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாடு ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாடு வருகின்ற நவம்பர் மாதம் 26 ம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற உள்ளது. மாநாடு குறித்த சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் வையம்பட்டி லட்சுமி மஹாலில் நடைபெற்றது. வையம்பட்டி ஒன்றிய செயலாளர் பொ,துரைராஜ் வரவேற்புரையாற்றினார். கட்சியின் நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை ஒன்றியம், வையம்பட்டி ஒன்றியம், மருங்காபுரி ஒன்றியங்களுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கூட்டத்தில் மாநாடு சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் கரூர் பாராளுமன்ற தொகுதியைச் சேர்ந்த தமிழர் தேசம் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.