பெல் நிறுவனத்தில் தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தல் இன்று நடைபெற்றது..

0 301
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் இன்று நடக்கும் பங்குபெறும் தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தலில் 9 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன.

திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளது. இந்த நிலையில் தொழிலாளர்களின் பிரச்சனைகள், சலுகைகள், உரிமைகள் ஆகியவற்றை வெல் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுத் தருவதற்காக அதிகாரம் கொண்ட சங்க உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம்.

கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு கொரொனா காரணமாக இரண்டு ஆண்டுகள் தேர்தல் நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது அதற்கான தேர்தல் நடைபெறுகிறது.பெல் தொழிற்சாலையில் (தொழிலாளர்கள்) உறுப்பினர்கள் ஆரம்ப காலகட்டத்தில் 17 ஆயிரம்பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மிகவும் சுருங்கி மொத்தம் 4 ஆயிரத்து 565வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

இதில் 10% வாக்குகள் பெரும் சங்கங்கள் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும் இந்த நிலையில் தொமுச, ஏடிபி, ஐஎன்டியூசி, டிடிஎஸ் மற்றும் ஏஐடியூசி, அம்பேத்கர் யூனியன், பிஎம்எஸ், சிஐடியு, எல்எல்எப்| என்டிஎல்எப் என 9 சங்கங்கள் போட்டியிடுகின்றன..

இந்த சங்கங்கள் தேர்தல் 23ஆம் தேதி பெல் தொழிற்சாலை வளாகத்தில் 5 வாக்குசாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5மணி முடிவடையும் பின்னர் அன்று இரவே பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதற்கான தேர்தல் அலுவலராக பெல் நிறுவன பொது மேலாளர் கமலக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் அதிக வாக்கு மற்றும் உறுப்பினர்களை கொண்ட சங்கம் முதன்மை சின்னமாக தேர்வு செய்யப்படும். இதுவரை கடந்த 30 ஆண்டுகளாக பெல் தொமுச தொழிற்சங்கம் முதன்மை சங்கமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.