குத்தகை செலுத்தாத கோவில் நிலம் மீட்பு : வருவாய்த்துறை அதிரடி

0 374
Stalin trichy visit

இன்று 25/08/2022  திருச்சி, மலைக்கோட்டை, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான திருவெறும்பூர் வட்டம், எல்லக்குடி கிராமத்தில் ஆறு இடங்களில் அமைந்துள்ள நஞ்சை நிலங்கள் மொத்த பரப்பளவு. 3 ஏக்கர் 49 சென்ட் திருச்சி வருவாய் நீதிமன்ற உத்தரவின்படி செயலாக்க வருவாய் ஆய்வாளரால் சுவாதீனம் எடுக்கப்பட்டு திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.  மேற்படி நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.5,00,00,000/- ஆகும்.
மேலும், திருச்சி, மலைக்கோட்டை, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான திருவெறும்பூர் வட்டம். துவாக்குடி கிராமத்தில் இரண்டு இடங்களில் அமைந்துள்ள நஞ்சை நிலங்கள் மொத்த பரப்பு 3 ஏக்கர் 28 சென்ட் திருச்சி வருவாய் நீதிமன்ற உத்தரவின்படி திரு. ஹரிகிருஷ்ணன்  திருச்சி  செயலாக்க வருவாய் ஆய்வாளரால் சுவாதீனம் எடுக்கப்பட்டு திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேற்படி நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.2,00,00,000/- ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.