வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் முற்றுகை

0 240
Stalin trichy visit

திருச்சி, ஜன.31  மணப்பாறையில் வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் முற்றுகை. மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு வராததால் போராட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மாகாளிபட்டியில் வட்டாரப் போக்குவரத்து பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து திருச்சியில் இருந்து மோட்டார் வாகன ஆய்வாளர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு பொருப்பு பணியில் வாரத்திற்கு இரண்டு நாள் வீதம் மணப்பாறை அலுவலகத்துக்கு வந்து வாகன புதுப்பிப்பு, ஓட்டுநர் சான்று, புதிய பதிவு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு வரவேண்டிய நாள் என்பதால் வாகன புதுப்பிப்பு, வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆன்லைனில் அதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டு காத்திருந்தனர். ஆனால் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு வராததால் அதிருப்தியடைந்த வாகன ஓட்டுனர்கள், பயிற்சி பள்ளி நிர்வாகிகள் பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனையடுத்து பிற்பகலில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து பணியை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.
மணப்பாறை வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகத்திற்கு நிரந்தரமான மோட்டார் வாகன ஆய்வாளர் பணியமர்த்தவேண்டு என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.