திருச்சி அருகே இடி விழுந்ததில் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது!
திருவெறும்பூர் பகுதியில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரம் மேலத்தெருவில் இடி விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒரு தென்னை மரத்தில் விழுந்து, தென்னை மர மட்டைகள் தீப்பற்றி எரிந்தது. உடனே தகவலறிந்த நவல்பட்டு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.
இந்த நிலையில் இடி விழுந்த இடத்தின் அருகே வசித்த விளையாட்டு ஆசிரியர் ராஜ்குமார் வீட்டிலிருந்த டிவி மற்றும் மின்விசிறி பழுதானது. மேலும் அவரது அண்ணன் பாஸ்கர் வீட்டிலும் மின்விசிறி, மிக்ஸி பழுதாகி உள்ளது.