மணப்பாறை சட்டமன்ற அலுவலகத்தில் குடியரசு தினவிழா
திருச்சி, ஜன.26 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 75 குடியரசு தின விழாவில் மணப்பாறை சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர், திமுக நகர செயலாளர் மு ம செல்வம், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், காங்கிரஸ் நகர செயலாளர் செல்வா, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் ஜனசக்தி உசேன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ஷாஜகான், விசிக நகர செயலாளர் வடிவேல், செல்லூர் பள்ளிவாசல் தலைவர் அனிபா, கபரஸ்தான் பள்ளி முத்தவல்லி தெளலத் கான், புனித லூர்து அன்னை ஆலயம் பங்கு தந்தை ஞானதுரை, மமக மாவட்ட துணைத் தலைவர் அக்பர், நகர தலைவர் இளையராஜா அக்பர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.