மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்

0 303
Stalin trichy visit

திருச்சி, ஜன.26  திருச்சி தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் பகுதி கழகத்தின் சார்பாக மொழிப்போர்  தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்.  திருச்சி கல்லுக்குழி மன்னார்புரம் பகுதியில் நேற்று நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு வட்டக் கழக செயலாளர் கணேசன் மூர்த்தி, ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார் ,  பகுதி கழகச் செயலாளர் மணிவேல் தலைமை வகித்தார்..

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு சிறப்புரையாற்றினார்.  தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ,   மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் உரையாற்றினார்.   மாவட்ட மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் செந்தமிழ்ச்செல்வன் பொற்கொடி இப்ராஹிம் ரம்யாபேகம்  நன்றி கூறினர்.
பொதுக் கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில அணி நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன்,  கே என் சேகரன் ,பி எம் சபியுல்லா கவிஞர் சல்மா,  செந்தில், துணை மேயர் திவ்யா மற்றும் மாவட்டக் மாநகர கழக நிர்வாகிகள் கோவிந்தராஜன் செங்குட்டுவன், மூக்கன் ,லீலாவேலுÞ குணசேகரன், நூர்கான், சந்திரமோகன், பொன் செல்லையா, சரோஜினி வெங்கட்ராஜ், தமிழ்ச்செல்வன் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக  திருச்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக நிறுவப்பட்ட கலைஞர் திருவுருவச் சிலையை கழக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலைஞர் திருச்சி TVS டோல்கேட் திறந்து வைத்தார். கழக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலினால்  திறந்துவைக்கப்பட்ட கலைஞர் சிலைக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் .எ.வ.வேலு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டார்.

 

Leave A Reply

Your email address will not be published.