பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல்
திருச்சி, ஜன.26 குடியரசு தின விழா முன்னிட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது கலந்து கொண்டு மாணவர்கள் சைக்கிள் வழங்கினார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே இளங்காக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கினார்
இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் குணசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர், திமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் சபியுல்லா, மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், ஊராட்சி மன்ற தலைவர், தலைமை ஆசிரியர், உள்ளிட்ட ஆசிரியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.