சோபனபுரத்தில் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் குடியரசு தின விழா

0 256
Stalin trichy visit

திருச்சி, ஜன.26   சோபனபுரத்தில் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினர்

நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேசியக் கொடியேற்றப்பட்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம், சோபனபுரம் கிராமத்தில் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் குடியரசு தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சோபனபுரம் தெற்கு வீதி பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, ஜமாஅத் தலைவர் M.I. தாஜ்தீன் தலைமை தாங்கினார். அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் வடக்கு வீதி ஜமாஅத் தலைவர் ஷேக்தாவூத் முன்னிலை வகித்து சிறப்பித்தார்.

இந்த விழாவில் அரசியல் மற்றும் சமுதாய முக்கியத்துவமிக்க நிர்வாகிகள் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கனகராஜ் திமுக கிளைச் செயலாளர் சவுக்கத்தலி ஒன்றிய சிறுபான்மையினர் நலன் உரிமைப்பிரிவு அமைப்பாளர் ஆலிம். சகாப்தீன் அல்புஹாரி
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் இணைந்து எழுச்சியுடன் தேசிய கீதத்தைப் பாடினர். அதனைத் தொடர்ந்து ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. ஜமாஅத் நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் இதில் கலந்துகொண்டு மதநல்லிணக்கத்துடனும், தேசியப் பற்றுடனும் குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.