மணப்பாறையில் தொழிலாளர் விரோத நான்கு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மறியல் போராட்டம்

0 11
Stalin trichy visit

திருச்சி, ஆக.11  மணப்பாறையில் தொழிலாளர் விரோத நான்கு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மறியல் போராட்டம்.

தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். விதை மசோதா 2025 ஐ திரும்பப்பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் இன்று நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டம் மணப்பாறையில் விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. காமராஜர் சிலையில் இருந்து கோவில்பட்டி சாலை, திருச்சி சாலை வழியாக கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து பெரியார் சிலை அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்பு திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட விவசாய சங்கத்தினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.