லால்குடி வட்டார அளவில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
திருச்சி, ஆக.11 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடிசோழமங்கலத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் அட்மா திட்ட உறுப்பினர்களுக்கு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குநர் சத்தியப்பிரியா
பேசுகையில் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள்,நில உடமை பதிவு,பாரதப் பிரதமரின் கௌரவ நிதி திட்டம்,பசுந்தாள் விதைப்பு,குறுவை நெல் சாகுபடி செய்தல்,பயிர் காப்பீடு திட்டம் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் தே.தனசேகர் பேசுகையில் பழ செடி தொகுப்பு வழங்குதல், தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரம் பயன்படுத்துதல் உர மேலாண்மை செய்தல் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.மாநில தோட்டக்கலை மேம்பாடு திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் பைகள், விதைகள் வழங்குதல் நுண்ணீர் பாசனம் திட்டம் பற்றி அட்மா திட்ட உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கி கூறினார்கள்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரி செல்வன் ஆலோசனை குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அட்மா திட்ட 2026 – 2027 ஆண்டில் பெறப்பட்ட தவணை இலக்கு விவரம் பற்றி விவசாயிகள் அட்மா திட்ட ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு விளக்கி கூறி செயல் விளக்கம் முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து பயன்பெற கேட்டுகொண்டார்.
ஆலோசனை குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர் அன்பழகன் மற்றும் உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் தொழில்நுட்ப கையேடு மற்றும் தொழில்நுட்ப துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.