பெரகம்பி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி : பெரம்பலூர் எம்.பி தொடங்கி வைத்தார்
திருச்சி, பிப்.21 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், பெரகம்பி ஊராட்சியில் எதுமலை – பெரகம்பி சாலையில் ரூ.3.83 கோடி மதிப்பீட்டில் 2.10 கி.மீட்டர் நீளமுள்ள சாலை அமைப்பதற்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு, மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் நெடுஞ்சாலைதுறை கண்காணிப்பு பொறியாளர் இளம்வழுதி, கோட்டப் பொறியாளர் கண்ணன், உதவி கோட்டப் பொறியாளர் சிட்டிபாபு, உதவி பொறியாளர் செம்புலிங்கம், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.