திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருச்சி, பிப். 21 திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி தில்லை நகரில் உள்ள அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா-வின் 78வது பிறந்தநாள் விழாவை அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை நடத்துவது, எதிர்வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் தமிழக முதல்வராக்க அயராது கழக பணியாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
மேலும் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர்.ஜோதிவாணன், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் ஆர்.வனிதா,வி.பத்மநாதன், பகுதி கழக செயலாளர்கள் எம்.ஏ.அன்பழகன்,டி.ஏ.எஸ்.கலீலுல் ரஹ்மான்,எல்.கே.ஆர்.ரோஜர்,வி.வாசுதேவன்,ஆர்.வெங்கட்பிரபு,எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,ஆர்.ராஜேந்திரன், நாகநாதர் பாண்டி,வி.கலைவாணன், கருமண்டபம் பி.சுரேந்தர்,கழக செயற்குழு உறுப்பினர்கள் சதர் (எ) சதுரூதீன்,வெல்லமண்டி பெருமாள், மல்லிகா செல்வராஜ்,
மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர்.ரஜினிகாந்த், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.ஞானசேகர், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் கோ.கு.அம்பிகாபதி, மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ்.தர்மராஜ்,ராஜா, டாஸ்மாக் செந்தில்குமார், கழக நிர்வாகிகள் அக்பர் அலி, தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்